கோவில்பட்டி: தமிழ்நாடு கைப்பந்து அணிக்குத் தேர்வான கோவில்பட்டி மாணவி ஷர்மிளா தேவி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷர்மிளா தேவி, மாநில அளவிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடி, தமிழ்நாடு அணிக்குத் தேர்வாகியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.