சாத்தான்குளம்: மீரான்குளம் பகுதியில் மாருதி ஈகோ வேன் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது 3 பேர் மீண்ட நிலையில் 5 பேர் பலி
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாரன் விளை பகுதியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்காக குடும்பத்துடன் கோயம்புத்தூர் துடியலூரைச் சேர்ந்தவர் மோசஸ், இவரது மனைவி வசந்தா மற்றும் உறவினர்களான ரவி கோவில் பிச்சை, இவரது மனைவி கிறிஸ்ட்டியா கிருபா, பெரிசோன், இவரது மனைவி சைனி பிரபா இத்தம்பதியின் குழந்தை ஸ்டாலின், ஜெனிட்டா ஆகிய 8 பேர் மாருதி ஈகோ காரில் வந்துள்ளனர். மீரான்குளம் பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது இதில் 5 பேர் உயிரிழந்தனர்.