சாத்தான்குளம்: திருச்செந்தூர் சாலையில் லாரி மீது லோடு ஆட்டோ மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிய பரபரப்பு
சாத்தான்குளத்தில் திருச்செந்தூர் சாலையில் சாலை ஓரத்தில் லாரி ஒன்றிலிருந்து பொருட்களை அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு இறக்கிக் கொண்டு வந்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்து நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. இதில் யாருக்கும் எந்தவித சேதமும் இல்லை எனினும் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.