தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உதய மார்த்தாண்ட விநாயகர் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பூஜையில் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.