சாத்தான்குளம்: மீரான்குளம் பகுதியில் நேற்று மினி வேன் விபத்தில் கிணற்றில் காணாமல் போன 45 பவுன் நகை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தில் கிணற்றில் நேற்று காருடன் விழுந்து மூன்று பேர் உயிருடன் மீட்ட நிலையில் 5 பேர் சடலமாக மீட்டனர். மேலும் கிணற்றில் காணாமல் போன 45 பவுன் நகையை மீட்பதற்காக கிணற்றில் தற்போது 5 மணி நேரத்துக்கு மேலாக இரண்டு மின் மோட்டார் மூலம் ஈடுபட்டு வருகின்றனர்.