பெரம்பலூர்: வேப்பந்தட்டை சாத்தனவாடியில் விசிக 'வேர்களைத் தேடி' பயணம்: புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
வேப்பந்தட்டை சாத்தனவாடியில் விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் 'வேர்களைத் தேடி' பயணத்திட்டம் நடைபெற்றது. இதில் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். மேலும், கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.