கொடைக்கானல்: கொடைக்கானலில் கோலாகலமாக நடந்த உலக சுற்றுலா தின விழா!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபயணம் மற்றும் பிரையன்ட் பூங்காவில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.