நாமக்கல்: நாமக்கல்லில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி நாமக்கல் பூங்கா சாலையில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.