அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!
நாகர்கோவிலில் வீ த லீடர்ஸ் இயக்கம் சார்பில் போதை இல்லாத தமிழகத்தை வலியுறுத்தி 5 கி.மீ தூரம் பேரணி நடைபெற்றது. இ.எஸ். சகாயம் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.