வேலூர்: மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகள் என்ன?
வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் எதிரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாரத்தில் 5 நாள் வேலை, கூடுதல் பணியாளர் நியமனம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.