ஆம்பூர்: ஆம்பூரில் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவகுப்பு! 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விஜயதசமி விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். மழைக்கு மத்தியிலும் நடந்த இந்த நிகழ்விற்கு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.