தென்காசி: மேக்கரையில் மீண்டும் வசூல் வேட்டை! 5 ஆயிரம் வரை கட்டணம்? என்ன நடக்கிறது?
தென்காசி மாவட்டம் மேக்கரையில் மீண்டும் சட்டவிரோதமாக தனியார் அருவிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. நீர்வழிப்பாதையை மறித்து சுற்றுலாப் பயணிகளிடம் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.