பெரம்பலூர்: 150 தாய்மார்களுக்கு பரிசு - பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 'தங்க மகளே வா' நிகழ்ச்சியில் 150 பெண் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஆட்சியர் அப்துல் ராசிக் பரிசுகளை வழங்கினார். குழந்தை திருமணம் மற்றும் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணர்வு எண்களையும் அவர் வெளியிட்டார்.