அம்பாசமுத்திரம்: நெல்லை: அணவன் குடியிருப்பு பகுதியில் தொழிலாளியை தாக்கிய கரடி - வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகே கட்டிட தொழிலாளியை தாக்கிய கரடியை வனத்துறையினர் விரட்டினர். காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி. கரடி நடமாடும் பகுதிகளில் கூண்டு வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு.