குடியாத்தம்: வேலூர்: இரவு நேர மின்வெட்டினால் தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே இரவு நேர மின்வெட்டினால் 2 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வெட்டு பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.