அகஸ்தீஸ்வரம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாநில கட்சி அங்கீகாரம் - நாகர்கோவிலில் தொண்டர்கள் கொண்டாட்டம்
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாநில அரசியல் கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் த.வெ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.