வேலூர்: தேவாலய மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - ஆட்சியர் நேரில் ஆய்வு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தேவாலய கட்டுமான பணியின் போது மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். ஆட்சியர் லீலா அலெக்ஸ் மருத்துவமனையில் நலம் விசாரித்த நிலையில், ஒப்பந்ததாரர் டேவிட் மோகன் மீது திருவலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.