விருத்தாசலம்: தேமுதிக வேட்பாளராக சிவக்கொழுந்து அறிவிப்பு- பண்ருட்டி 4 முனை சந்திப்பில் கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்
அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவுக்கு கடலூர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் வேட்பாளராக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான சிவக்கொழுந்து அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நகர செயலாளர் பூக்கடை சேகர் தலைமையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முன்னதாக கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.