விருத்தாசலம்: விருத்தாம்பிகை ஐடிஐ அருகே மினி லாரியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ₹53 ஆயிரம் பணம் பறிமுதல்
விருத்தாச்சலம் விருத்தாம்பிகை ஐடிஐ அருகே விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற மினி லாரியை சோதனை செய்து போது, அதில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ₹53 ஆயிரத்து 380 பணத்தை பறிமுதல் செய்து விருத்தாச்சலம் தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.