விருத்தாசலம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என விருத்தாச்சலம் மேம்பாலம் அருகில் பறக்கும்படையினர் வாகன சோதனை.
தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் வாக்காளர்களுக்கு பணம் பொருட்கள் கொடுப்பதற்கு எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதற்காக பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை உருவாக்கி வாகன தணிக்கை, ஆய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திட்டக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரிகளும் ஆங்காங்கே தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்