பண்ருட்டி: நெய்வேலி ஆர்ச் கேட் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹2 லட்சம் பணம் பறிமுதல்
பண்ருட்டி நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி ஆர்ச் கேட் அருகே தேர்தல் அலுவலர் கார்த்திக் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நெய்வேலி பிளாக்-06 முகவரியைச் சேர்ந்த நத்தா என்பவருக்கு சொந்தமான காரில், ஆய்வு செய்த போது உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ₹2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி வட்டாட்சியர் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.