தருமபுரி: 1.44 லட்சம் பேருக்கு குழந்தைகள் தின வாழ்த்து - கேக் வழங்கி ஆட்சியர் நெகிழ்ச்சி
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1,390 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் வழங்கினார். தேர்ச்சி விகிதத்தை 100 சதவீதமாக உயர்த்த மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.