கோவில்பட்டி: கோவில்பட்டி பள்ளி ஆண்டு விழா: மாணவிகளுக்கு திடீர் சாமி வந்து ஆடியதால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவின்போது, மாணவிகள் பக்திப் பாடலுக்கு நடனமாடிய நிலையில், கீழே அமர்ந்திருந்த பல மாணவிகளுக்கு திடீரென சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சக மாணவிகள் அவர்களை உடனடியாகக் கட்டுப்படுத்தினர்.