திருவாடனை: தொண்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: வீடியோ எடுத்தவரிடம் காவல் ஆய்வாளர் தள்ளுமுள்ளு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநரை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த நபரிடம், தொண்டி காவல் ஆய்வாளர் கனகராஜ் போனைப் பறிக்க முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது. தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.