கீழ்வேளூர்: நாகையில் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு
கூட்டுறவு கடன் தள்ளுபடி, கடைமடைக்கு தண்ணீர் வழங்க கோரி நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தால் நாகை - திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.