காட்பாடி: வேலூர்: காட்பாடி அருகே 70 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் - போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சிங்காரெட்டியூர் பகுதியில் விவசாய நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ பட்டாசு தயாரிக்கும் வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.