தென்காசி: ஆலங்குளத்தில் அதிரடி: மணல் கடத்தல் லாரிகள் சிக்கியதால் காவலர் பணியிட மாற்றம்!
ஆலங்குளத்தில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை எஸ்.பி ஸ்டாலின் அதிரடியாகப் பிடித்தார். தகவல் தெரிவிக்கத் தவறிய தனிப்பிரிவு தலைமைக் காவலர் பாலமுருகன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.