பண்ருட்டி: முத்துகிருஷ்ணாபுரம் ஏரியில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டதில் உறுதுணையாக இருந்த மோப்பநாய்களுக்கு அவரது அலுவலகத்தில் எஸ்பி பாராட்டு
பண்ருட்டி காவல் நிலைய சரகம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் காணாமல்போன வழக்கில் பல இடங்களிலும் நேரில் தேடியும், CCTV கேமராவை ஆய்வு மேற்கொண்டும் புலன் எதுவும் கிடைக்காத நிலையில், காவல்துறை மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவைக்கப்பட்டது. காணாமல் போன சிறுவனின் பள்ளிபை மற்றும் உடைகளை மோப்ப நாய்கள் மோப்பம் பிடித்து 2 கி.மீ ஓடி சென்று ஏரிக்கரையில் நின்று குரைத்தது.இவ்வழக்கில் புலன் விசாரணைக்கு உறுதுணையாக இருந்த மோப்ப நாய்களுக்கு பிடித்த பிஸ்கட் கொடுத்து எஸ்பி மகிழ்வித்து பாராட்டினார்