பண்ருட்டி: பண்ருட்டி லிங்க் ரோட்டில் அரிசி கடையில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பண்ருட்டி லிங்க் ரோடு பகுதியில் அரிசி கடை நடத்தி வரும் முதிய பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் பறித்துச்சென்ற அய்யனார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.