பண்ருட்டி: விசூர் அடுத்த வெள்ளவாரி ஆற்றின் குறுக்கே 9 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த விசூர் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தடுப்பணையை பார்ப்பான் வெள்ளவாரியில் ஆற்றின் குறுக்கே ரூ 9.கோடி மதிப்பிலான புதிய தடுப்பணை கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா .ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்த தடுப்பணை கட்டுவதால் நீர் பிடிப்பு சேமிப்பின் மூலம் நீர்மட்டம் உயரம் இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என எம்எல்ஏ தகவல்.