பண்ருட்டி: முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் மாயமான சிறுவனின் உடல் அதே பகுதியில் உள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவன் 9 வயது சிறுவன் கிஷோர். இவரை காணாதது குறித்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உறவினர் இல்லம் என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பண்ருட்டி துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையில் போலீசார் சிறுவனை தேடி தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். சிறுவனின் சடலம் அதே பகுதியில் உள்ள ஏரியில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது