கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீர் கனமழை: மகிழ்ச்சியில் பொதுமக்கள்
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மூஞ்சிக்கல், செண்பகனூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.