செங்கம்: திருவண்ணாமலை: மதுபான கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் நூதன போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பொரசப்பட்டு தண்டா பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மக்கள் கஞ்சி காய்ச்சி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.