திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பரபரப்பு: இருசக்கர வாகனத்தில் வந்தவரை தட்டிக்கேட்ட இளைஞர் வெட்டு
திருவண்ணாமலை ஆடு தொட்டி தெருவில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நபரை தட்டிக்கேட்ட இளைஞர் வெட்டப்பட்டார். தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.