ஆலந்தூர்: ஆப்பூர் பெருமாள் கோவில் தடுப்புச்சுவர் விரிசல்: பக்தர்கள் அச்சம்!
செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் மலை கோவிலில் 20 ஆண்டு பழமையான தடுப்புச்சுவர் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அறநிலையத்துறை உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.