விருத்தாசலம்: மணக்கொல்லை,பழையபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் சிவகொழுந்ததற்கு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முடப்புளி,நடியப்பட்டு பாலக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவக்கொழுந்தவருக்கு அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.திறந்த வேனில் அதிமுக மற்றும் தேமுதிக தொண்டர்களுடன் சென்று ஒவ்வொரு கிராமத்திலும் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்