விளவங்கோடு: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: களைகட்டிய வியாபாரம்!
ஞாயிறு விடுமுறை மற்றும் வெயில் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் திருப்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அருவியில் குளித்து மகிழும் பயணிகள், பூங்கா மற்றும் படகு சவாரி செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையால் வியாபாரமும் களைகட்டியுள்ளது.