பெரம்பலூர்: கனிம வாகனங்களுக்கு GPS கட்டாயம் - ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் செப்டம்பர் 30, 2026-க்குள் AIS 140 தரத்திலான GPS கருவி பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம், தவறும் பட்சத்தில் அனுமதிச் சீட்டு வழங்கப்படாது.