சேலம்: 20 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லை - கண்களை கட்டிக்கொண்டு நூதன போராட்டம்
Salem, Salem | Oct 3, 2026 சேலம் மாவட்டம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சியில், அடிப்படை வசதிகள் கோரி கிராம சபை கூட்டத்தில் மக்கள் கண்களை கட்டிக்கொண்டு மனு அளித்தனர். பட்டா, குடிநீர் மற்றும் சம்பள பாக்கி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நடவடிக்கை இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் என எச்சரித்துள்ளனர்.