பெரம்பலூர்: பச்சைமலை கனமழை - வேகமாக நிரம்பும் அடைக்கம்பட்டி ஏரிகள்!
பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டி பச்சைமலையில் பெய்த கனமழையால் மலைநீரூற்றுகள் உற்பத்தியாகி, சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரி வேகமாக நிரம்பி வருகின்றன. அங்கிருந்து டி.களத்தூர் ஏரிக்கு தண்ணீர் செல்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.