காளையார்கோவில்: சிறுகானப்பேரி பஸ் ஸ்டாப் அருகே வெளிநாட்டில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு வந்தவர் மயங்கி கீழே விழுந்து பலி
சிவகங்கை மாவட்டம் சாத்தரசம்பட்டியை சேர்ந்த கண்ணன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6-ம் தேதி சொந்த ஊருக்கு வந்த கண்ணன் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு நடந்து சென்று போது சிறுகானப்பேரி பஸ் ஸ்டாப் அருகே மயங்கி கீழே விழுந்தார். அவரை காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.