உத்தமபாளையம்: தேனி சுருளி அருவி: இரண்டாவது நாளாக களைகட்டிய சாரல் திருவிழா!
தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவின் இரண்டாம் நாளில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடைபெற்றன. விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்து நிகழ்வுகளை கண்டு மகிழ்ந்தனர்.