திருநெல்வேலி: திருநெல்வேலி ரயிலில் 27 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: தம்பதியினர் கைது
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஒடிசாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 54 கிலோ கஞ்சா சிக்கியது. இதன் மதிப்பு 27 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா தம்பதியை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.