உத்தமபாளையம்: சுருளி அருவியில் மீண்டும் தண்ணீர் வரத்து: உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்
தேனி மாவட்டம் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான இன்று சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.