திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் காவலர் வீரவணக்க நாள்: 3 முறை துப்பாக்கி முழங்க வீரர்களுக்கு மரியாதை
திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு, வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கி முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.