ஓசூர்: ஓசூரில் உலக இதய தினம்: மாணவர்கள் நடனம் மற்றும் பேரணியுடன் விழிப்புணர்வு
உலக இதய தினத்தை முன்னிட்டு ஓசூரில் இதயம் காப்போம் நடன நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் டிஎஸ்பி சுதிர் ஆகியோர் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.