பாளையங்கோட்டை: நெல்லை: விநாயகர் படம் வைத்து பிரியாணி விளம்பரம் - கடை உரிமையாளர் கைது
நெல்லை பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் பகுதியில் பிரியாணி கடை விளம்பரத்திற்காக விநாயகர் படத்தை பேனரில் வைத்த உரிமையாளர் ஜெயந்த் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்தியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.