நாமக்கல்: நாமக்கல்லில் நாளை ஆர்எஸ்எஸ் பேரணி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
நாமக்கல்லில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி யாதவ்கிரிஷ்அசோக் ஆய்வு செய்தார். மாலை 3 மணிக்கு பூங்கா சாலையில் தொடங்கும் பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பூங்கா சாலையை வந்தடைகிறது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.