வேப்பந்தட்டை: பெரம்பலூர்: குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் அரசலூரில் 4 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறை பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.