கீழ்வேளூர்: ஒரத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று அபாயம்!
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பிணவரை அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அவதி. தெரு நாய்கள் குப்பைகளை பரப்புவதால் நோய் தொற்று அபாயம் உள்ளதாக கூறி, அவற்றை அகற்ற முதல்வர் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.